12/12/2008

எண்ணங்கள்: NHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (2)

எண்ணங்கள்: NHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (2)

12/03/2008

போர் நிறுத்தம் தொடர்பாக மகிந்தவுடன் பேசுவதற்கு இந்தியப் பிரதமர் சம்மதம்

[புதன்கிழமை, 03 டிசெம்பர் 2008, 03:53 மு.ப ஈழம்] [க.திருக்குமார்]

தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் சிறிலங்கா அரசாங்கத்துக்கும் இடையில் போர் நிறுத்தம் எட்டப்படுவது தொடர்பாக அந்நாட்டின் அரச தலைவர் மகிந்த ராஜபக்சவுடன் பேசுவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சம்மதம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது: போர் நிறுத்தம் மேற்கொள்வது தொடர்பில் சிறிலங்காவின் அரச தலைவருடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் சம்மதம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த 34 நாடாளுமன்ற உறுப்பினர்களின் வேண்டுகோளைத் தொடர்ந்து இந்தியப் பிரதமர் தனது சம்மதத்தை தெரிவித்தார்.திராவிட முன்னேற்றக் கழகத்தின் மத்திய அமைச்சர்களில் ஒருவரான டி.ஆர்.பாலு தலைமையில் தமிழக நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு இந்தியப் பிரதமரை நேற்று செவ்வாய்க்கிழமை சந்தித்தது.

இடம்பெற்று வரும் போரினால் வன்னியில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடிகளை குறைப்பதற்கு போர் நிறுத்தமும் சமாதானப் பேச்சுக்களும் அவசியம் என பிரதமரை சந்தித்த நாடாளுமன்றக் குழுவினர் வற்புறுத்தினர். இந்தியாவின் பாதுகாப்புக்கு தமிழகத்தின் உறுதிப்பாடு அவசியமானது. எனினும் இலங்கையின் நிலமை அங்கு ஒரு பதற்றமான சூழ்நிலையை தோற்றுவித்துள்ளது என அவர்கள் மேலும் தெரிவித்தனர்.இச்சந்திப்பில் தி.மு.க. கட்சி சார்பாக மத்திய மந்திரிகள் டி.ஆர்.பாலு, ஆ.ராசா, பழனி மாணிக்கம், ரகுபதி, வெங்கடபதி, சுப்புலட்சுமி ஜெகதீசன், நாடாளுமன் உறுப்பினர்களான சி.குப்புசாமி, ஏ.கிருஷ்ணசாமி, வேணுகோபால், கே.சி.பழனிச்சாமி, பவானி இராஜேந்திரன், சுகவனம், காதர்மொய்தீன், கனிமொழி, திருச்சி சிவா, அமீர் அலி ஜின்னா, வசந்தி ஸ்டான்லி.

காங்கிரஸ் கட்சி சார்பாக மத்திய மந்திரிகள் ஜி.கே.வாசன், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், நாடாளுமன்ற உறுப்பினர்களான கே.வி.தங்கபாலு (தமிழக காங்கிரஸ் தலைவர்), ஜெயந்தி நடராஜன், கார்வேந்தன், என்.எஸ்.வி.சித்தன், ஹாரூண் ரஷீத், ஞானதேசிகன்.

பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக மத்திய மந்திரிகளான அன்புமணி இராமதாஸ், ஆர்.வேலு, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.கே.மூர்த்தி, பொன்னுசாமி, கே.தன்ராஜ், செந்தில், பேராசிரியர் இராமதாஸ்.
போட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.சந்திப்பின் பின்னர் மன்மோகன் சிங்கிடம் கையளிக்கப்பட்டுள்ள கோரிக்கை மனுவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் தமிழர்கள் தங்களது சொந்த மண்ணிலேயே அகதிகளாக நிற்கிறார்கள். அவர்களுக்கு அடிப்படை மனித உரிமைகள் கூட மறுக்கப்பட்டுள்ளன. இலங்கை தமிழர்கள் கொல்லப்படுவது உலகளவில் தமிழ் மக்களை மிகவும் வேதனையடைச் செய்திருக்கிறது.
சிறிலங்கா அரசு தமது சொந்த குடிமக்கள் மீது நடத்தி வரும் போரை உடனடியாக நிறுத்தி அங்குள்ள 50 லட்சம் தமிழர்களின் நியாயமான உரிமைகளைப் பெற அரசியல் ரீதியான தீர்வைக் காணவேண்டும் என்று உலககெங்கிலும் உள்ள தமிழ் மக்கள் கோரி வருகின்றனர்.
தமிழ்நாட்டில் உள்ள அரசியல் சார்ந்த மற்றும் அரசியல் சார்பற்ற அமைப்புகள் அனைத்தும் இலங்கை தமிழர்கள் மீது கட்டவிழ்த்து விடப்படும் அடக்கு முறைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்கள், பேரணிகள், தொடருந்து மறியல் போராட்டங்களை நடத்தின.

இலங்கை தமிழர்களுக்கு உதவுவதற்காக நிதியளிக்க வேண்டி தமிழக முதலமைச்சர் பொதுமக்களுக்கு விடுத்த கோரிக்கையின் பலனாக 37 கோடி ரூபாய் திரட்டப்பட்டது. தற்போது 80 ஆயிரம் தனி நபர் நிவாரணப் பொருட்கள் அடங்கிய கப்பல் சிறிலங்கா சென்றடைந்துள்ளது.

இத்தனை நடவடிக்கைகள் மேற்கொண்டும் தமிழ்நாட்டிலும், உலகெங்கிலும் உள்ள மக்கள் கேட்டுக் கொண்டவாறு இலங்கையில் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்படவே இல்லை. சிறிலங்கா அரசு, இலங்கை தமிழினத்தை ஒழிக்கவேண்டும் என்பதில் பிடிவாதமாக இருக்கிறது.

எனவே இலங்கையில் போரை நிறுத்தவும், அங்குள்ள தமிழர்கள் தமது சொந்த மண்ணில் மதிப்புடன் வாழவும், இந்திய அரசு தலையிடவேண்டும். மேலும், அனுப்பிய நிவாரணப் பொருட்களையும் உரிய முறையில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு கிடைக்கும்படி செய்திடவேண்டும் என அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி முன்னர் குறிப்பிட்டபடி டிசம்பர் 4 ஆம் நாள் இந்தியப் பிரதமரை சந்திப்பார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாம் எந்த நாட்டிற்கும் எதிரானவர்கள் அல்ல; உலக நாடுகள் எம்மீதான தடையை நீக்க வேண்டும்; நாம் இந்தியாவின் நண்பர்கள்: தேசியத் தலைவர்

காலமும் கடல் கடந்த தூரமும் எம்மைப் பிரிந்து நிற்கின்ற போதும், எமது மக்களின் இதயத்துடிப்பை நன்கறிந்து, தமிழகம் இந்தவேளையிலே எமக்காக எழுச்சிகொண்டு நிற்பது தமிழீழ மக்கள் அனைவருக்கும் எமது விடுதலை இயக்கத்திற்கும் பெருத்த ஆறுதலையும் நம்பிக்கையையும் ஏற்படுத்தியிருக்கிறது.

எம்மக்களுக்காக ஆதரவுக் குரல் எழுப்பி, அன்புக்கரம் நீட்டும் தமிழக மக்களுக்கும் தமிழகத் தலைவர்களுக்கும் இந்தியக் தலைவர்களுக்கும் இந்தச் சந்தர்ப்பத்திலே எமது அன்பையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.